Skip to main content

ரஜினிகாந்த் நடிப்போடு நிறுத்திக்கொள்வது நல்லது... தா.பாண்டியன் காட்டம்

Published on 08/02/2020 | Edited on 11/02/2020

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, 

  
இஸ்லாமியர்களுக்கு முதல் குரல் கொடுக்க ரஜினி யார், அவர் கடைசி குரலும் கொடுக்க வேண்டாம், முதல் குரலும் கொடுக்க வேண்டாம். ரஜினி நடிப்போடு நிறுத்தி கொள்வது நல்லது. இந்தியாவில் எல்ஐசியில் தான்சேமிப்பு பணம் பத்திரமாக இருக்கிறது என மக்கள் நினைத்திருந்தனர். அதனை தற்போது தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளனர். நிர்மலா சீதாராமன் இந்தியாவிற்கு கிடைத்த ஒரு துரதிர்ஷ்டம்.

சிதம்பரம் குடும்பத்தினரை சிறையிலடைத்து இருப்பது ஒரு பழிவாங்கும் குணம் ஆகும். டாலருக்கு இந்தியா முழுமையாக அடிமையாகி விட்டது. நமக்கே தெரியாமல் முகேஷ் அம்பானிக்கு நாம் கப்பம் கட்டுகிறோம். உலக பணக்காரர்களில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் இரண்டு கப்பல்கள் கட்ட சொல்லி இருக்கிறார். அமெரிக்காவில் டைட்டானிக் கப்பலை விட அதிக எடை உள்ளதாக அந்த கப்பலை நிர்மாணிக்க சொல்லப்பட்டுள்ளது.

 

THA.PANDIAN INTERVIEW IN MADURAI

 

மோடியின் கொள்கை மேக் இன் இந்தியா. ஆனால் முகேஷ் வெளிநாடுகளில் கப்பல் வாங்கி உள்ளார். இது தான் மோடியின் நிலையாக உள்ளது. 2019 ல், ஒரு கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். மேலும் பல பெரிய கம்பெனிகள் 30 சதவீதம் ஆட்குறைப்பு செய்துள்ளது.  எதிர்காலத்தில் குடி தண்ணீருக்கும் சிக்கல் வரலாம். மோடியின் ஆட்சி ஆறாவது ஆண்டில் இருக்கிறது இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் எதிர்காலத்தில் இந்தியா இருக்குமா என்ற சந்தேகம் வருகிறது.

வணிக போரில் சீனாவை மண்டியிட வைக்க முடியாததால், அமெரிக்க கிருமி போரை துவக்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிரம்ப் இதுபோன்ற வேலைகளை செய்கிறார் என விசாரணை நடந்து வருகிறது. ஒரு மாத காலத்திற்கு முன்பு இந்தியாவிலேயே நிர்வாகத்தில், ஊராட்சியில் அமைதி நிலவியது என்று, சகல விஷயங்களிலும் முதலிடத்தில் இருப்பது தமிழகம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது .

வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வாணையம் 13 இருக்க வேண்டும். கல்வித் துறை, சுகாதாரத் துறை, மருத்துவத்துறை, ஆய்வுத்துறை என சகல முறைகளுக்கும் ஆக இருப்பதற்கு 13 உறுப்பினர்கள் இருக்கவேண்டும் . ஆனால் கடந்த மூன்று வருடமாக தமிழகத்தில் மூன்று உறுப்பினர்கள் மட்டும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் எவ்வாறு பணி நியமனம் நடந்தது என்பது தெரியவில்லை என்கிறார்கள். உலக முதலாளித்துவம் மனித குலத்திற்கு எதிராக தங்களுடைய அழிவு வேலைகளை வேகமாக தொடங்கியிருக்கிறது. பருப்பு, பயறு, பட்டாணி, சமையல் எண்ணெய் இவை நாலும் இறக்குமதி செய்கிறோம். சமையல் எண்ணெய், பட்டாணி போன்றவை வரி அதிகமாக விதைப்பதால் அவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அரசியல் பேசுவதற்கு நடிகர் ரஜினிகாந்த்துக்கு எந்த அருகதையும் கிடையாது. குரல் கொடுப்பதே நான் என்று கூறுகிறார். எங்களை தற்காத்துக் கொள்வதற்கு எங்களுக்கு தெரியும். எங்களுக்கு சொல்லித் தருவதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்