Skip to main content

தொடர்ந்து நிவாரண பணிகளில் கவனம் செலுத்தப்படும்! தொகுதி மக்களிடம் எம்.எல்.ஏ. உறுதி!

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

 

நாகப்பட்டிணம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அத்தொகுதியின் எம்எல்ஏவான மு.தமிமுன் அன்சாரி, சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆங்காங்கே அப்பகுதி மக்களை சந்தித்து, நடைபெறும் பணிகள் குறித்து கருத்து கேட்டார்.
 

தற்போது அடிப்படை பணிகள் நாகை தொகுதியில் ஒரளவு நிறைவுற்றிருப்பதாகவும், அடுத்த கட்ட பணிகள், நிவாரண கோரிக்கைகள் குறித்த ஆய்வுகள் தொடங்கியிருப்பதாகவும், அதிகாரிகளும், அரசுப் பணியாளர்களும் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
 

நிவாரணப் பொருள்களை கொண்டு வருபவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவற்றை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
 

 நிவாரண பணிகள் மற்றும் வழிகாட்டல் தொடர்பாக தமது எம்எல்ஏ அலுவலகத்தில் 10 பேர் கொண்ட குழு காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை செயல்பட்டு வருவதாகவும், உதவிக் கேட்டு வருபவர்கள் முறையாக கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறினார்.
 

இன்று முதல், மாலை நேரங்களில் தொகுதிக்கு வெளியே நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் "மனித நேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்புக் குழு" மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளிலும் முழு கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறினார். 

 



 

சார்ந்த செய்திகள்