Skip to main content

அனைத்து துறைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

taminadu chief minister mkstalin discussion with all department secretaries

 

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (16/09/2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அனைத்து அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

இதில், சட்டப்பேரவை விதி 110- ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அமைச்சர் பெருமக்களால் அவர்களது துறைச் சம்மந்தப்பட்ட மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்