Skip to main content

"தமிழகத்தில் பணம் கொடுத்து வேலையை வாங்குகிற ஆட்சி நடக்கிறது"- மக்களவை உறுப்பினர் செல்வராசு பேட்டி!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

தமிழகத்தில் பணம் கொடுத்து வேலையை வாங்குகிற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாகை மக்களவை உறுப்பினர் செல்வராசு குற்றச்சாட்டியுள்ளார்.


அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழக அரசே எங்கே எனது வேலை? என்ற தலைப்பில் ஒரு கோடி இளைஞர்களை சந்திக்கும் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று (22/02/2020) திருவாரூர் மாவட்டம் புதிய ரயில் நிலையம் அருகே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யக்கோரி ஏராளமான இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

tamilnadu jobs take money have job formula member of lok sabha


இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு உட்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

tamilnadu jobs take money have job formula member of lok sabha

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாகை மக்களவை உறுப்பினர் செல்வராசு கூறுகையில், "மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து எந்தவித அறிவிப்பும் இடம் பெறவில்லை. தமிழகத்தில் மட்டும் 95 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் பணம் கொடுத்து வேலை வாங்குகிற ஆட்சி நடைபெற்று வருகிறது. பணம் கொடுத்தால் மட்டுமே வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்," என தெரிவித்தார்.


 

சார்ந்த செய்திகள்