Skip to main content

தமிழக வாக்காளர்கள் வாக்குகளின் விலை ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரை விலை போனது

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

 

     ஜனநாயகத்தை உருவாக்கும் விலை மதிப்பில்லாத ஓட்டுக்கும் விலை  வைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு ஓட்டின் விலை ரூ. 200 முதல் ரூ. 2000 வரை விற்பனை ஆகியுள்ளது. இந்த விற்பனை என்பது வேதனை அளிப்பதாக இருந்தாலும் பல இடங்களில் எந்த வேட்பாளரும் விலைக்கு வாங்கவில்லை என்பது ஆறுதலாக உள்ளது.  

 

v


    இடைத் தேர்தல்கள் அ.தி.மு.கவுக்கு மிகவும் முக்கியமான தேர்தல். ஆட்சியை தக்க வைக்க வெற்றி வேண்டும். அதனால் இடைத் தேர்தல் நடக்கும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் 1.5 லட்சம் வாக்காளர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் கொடுத்துவிட்டனர். அதே தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க, மற்றும் அ.ம.மு.க வேட்பாளர்கள் தலா ரூ. 500 ம் கொடுத்துள்ளனர்.  அதே போல நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தலா ரூ. 200 கொடுத்திருக்கிறார்கள். 


சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் கை’க்கும் 200 தான், தாமரை, பரிசுப்பெட்டிக்கும் ரூ. 200 என்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு மட்டும் பணம் கொடுத்த வேட்பாளர்கள் மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.


தமிழ்நாட்டில் ஒரு ஓட்டின் விலை ரூ. 200 க்கும் 2000 க்கும் விற்பனை செய்வது வேதனை தான். பிரச்சார மேடைகளில் பணம் கொடுத்து ஜெயிக்க நினைப்பார்கள் என்று பேசிய அத்தனை கட்சி வேட்பாளர்களும் ஆங்காங்கே பணம் கொடுத்து தான் வாக்குகளை வாங்கி வருகிறார்கள்.


            

சார்ந்த செய்திகள்