தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27- ஆம் தேதி மற்றும் 30- ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று (02.01.2020) தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

virudhunagar district srivilliputhur admk mla husband win local body election

Advertisment

Advertisment

இந்நிலையில்ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபாவின் கணவர் முத்தையா, ஸ்ரீவில்லிபுத்தூர் 14- வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டு, 1991 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடராஜன், அமமுக வேட்பாளர் பால தண்டாயுதபாணி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம் (10.10PM)

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (354/515)

அதிமுக கூட்டணி: 180 முன்னிலை

திமுக கூட்டணி: 173 முன்னிலை

அமமுக: 1 முன்னிலை

ஒன்றிய கவுன்சிலர் பதவி (2,263/5067)

அதிமுக கூட்டணி; 937முன்னிலை

திமுக கூட்டணி: 1,127 முன்னிலை

அமமுக: 50 முன்னிலை

பிற கட்சிகள்- 149 முன்னிலை