Skip to main content

கலைஞரின் பேனா நினைவுச்சின்னம் குறித்து ஆளுநர் தமிழிசை கருத்து

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

tamilisai talks about karnataka bjp meeting tamil state song stopped issue

 

பாவேந்தர் பாரதிதாசனின் 133வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்குத் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 133வது பிறந்தநாளில் அவரை வணங்குவதில் பெருமை கொள்கிறேன். புதுச்சேரியில் இன்று (29.04.2023) மாலை பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா உள்ளது. புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாரதிதாசன் உடையது தான். புதுச்சேரியோடு பாரதிதாசனும், பாரதியாரும் ஒன்றிணைந்தவர்கள். அதனால் மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். நாளைய தினம் (30.04.2023) பிரதமரின் மனதின் குரல் 100வது நிகழ்வு ஒளிபரப்பப்படுகிறது. நாளை காலை தெலுங்கானாவிலும், மாலையில் அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் புதுச்சேரியிலும் கொண்ட இருக்கிறோம். மனதின் குரல் நிகழ்ச்சி மிகப்பெரிய சமுதாய புரட்சியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இளைஞர்கள் அனைவரும் மனதின் குரலைக் கேட்க வேண்டும். இது அரசியல் கலவாத சமுதாய நிகழ்ச்சி.

 

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமை இரண்டு மணி நேரச் சலுகை வரவேற்பு  நன்றாகத் தான் இருக்கிறது. எதிர்க் கட்சிகளிடம் இருந்து வரவேற்பு இருக்காது என்று தெரியும். எதிர்க்கட்சி தலைவர் சிவா இதனைப் பெண் அடிமைத் தனம் என்று குறிக்கிறார். இது எப்படி என்று தெரியவில்லை என்னைப் பொறுத்தவரைப் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். கடுமையாக பணியாற்றும் பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்த சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன். கலைஞருக்குப் பேனா சிலை வைப்பதற்குச் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து இருக்கிறார்கள். பேணா சிலை வைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் இது அவருக்கே  ஒத்துக்கொள்ளாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தான் அனுமதி கொடுக்கப்பட்டது இருக்கிறது" என்றார்.

 

கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது தமிழ்த் தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "அண்ணாமலை வருவார் அவரிடம் கேளுங்கள்" என்றார். டெல்லியில் மல்யுத்த  வீராங்கனைகளின்  பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு, "பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்து எல்லா அரசு உறுதி செய்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு நிச்சயமாகப் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.