Skip to main content

இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடும் பணி தொடக்கம்!

Published on 07/02/2022 | Edited on 07/02/2022

 

Tamil Nadu fishermen's boats to be auctioned off in Sri Lanka

 

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணி இன்று (07/02/2022) முதல் வரும் பிப்ரவரி 11- ஆம் தேதி வரை நடைபெறும் என இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, விசைப்படகுகளை ஏலம் விடும் பணி இன்று (07/02/2022) தொடங்கியது. காரைநகரில் நிறுத்தப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 65 விசைப்படகுகளை ஏலம் விடும் பணித் தொடங்கி உள்ளது. 

 

தமிழக மீனவர்களின் 105 படகுகளை பறிமுதல் செய்துள்ள இலங்கை அரசு, அந்த படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை கடற்படை முகாம்களில் நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, படகுகளை ஏலம் விடும் பணிகளைத் தடுக்க வேண்டும்; படகுகளை மீட்டு தர வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்