Skip to main content

ஆன்லைன் கல்விக்காக உயிரை பணயம் வைக்கும் மாணவர்கள்...!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

 Students who risk their lives for online education ...!

 

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. அதிகப்படியான மாணவர்கள் செல்ஃபோன் மூலமாகவே ஆன்லைன் கல்வி மேற்கொள்கின்றனர். அண்மையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செல்ஃபோன் டவர் சிக்னல் கிடைக்காததால் மாணவர்கள் அவதிப்படுகிற செய்தி 04.07.2021 அன்று வெளியாகியிருந்தது.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெரியகோம்பை, பரப்பன்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், அப்பகுதிகளில் போதிய அளவில் செல்ஃபோன் சிக்னல் கிடைக்காததால் சிக்னலுக்காக ஊரில் உள்ள ஆலமரங்களில் ஏறி ஆபத்தான முறையில் ஆன்லைன் பாடம் கற்றுவந்த நிலையில், தங்கள் கிராமத்திற்கு செல்ஃபோன் டவர் அமைத்துத் தருமாறு மாணவர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

 

அதனையடுத்து டவர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதேபோல் ஒரு சம்பவம் நாமக்கல்லில் நிகழ்ந்துவருகிறது. நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி பகுதியில் உள்ள ஊனந்தாங்கல் பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்கு சிக்னல் கிடைக்காததால் நீர் தேக்கத் தொட்டி மீது உயிரை பணயம் வைத்து ஏறி மிகவும் ஆபத்தான முறையில் பாடம் கற்றுவருகின்றனர். “சுற்றிலும் 20 கி.மீ. தூரம்வரை எந்த செல்ஃபோன் டவரும் இல்லாததால், நாங்கள் ஆன்லைன் வகுப்பை இப்படி ஆபத்தான முறையில் கற்றுவருகிறோம். எங்களுக்கு செல்ஃபோன் டவர் வசதி செய்து தர வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்