காவேரிபிரச்சனை குறித்து அண்மையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து இன்று ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் விவசாயசங்கம் சார்பில் வாழ்த்து விழா நடைபெற்றது. அந்த அவ்விழாவில் விவசாய சங்கம் சார்பில் கமல்ஹாசனுக்கு வீர வாள் மற்றும் ஏர்கலப்பை பரிசாக அளிக்கப்பட்டது.

kamal

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

kamal

அந்த நிகழச்சியில் பல தமிழக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்,காவேரி பிரச்சனையில் கர்நாடக முதல்வரை சந்திக்க கமலஹாசன் யார்? என்று பலர் கேள்வி எழுப்புவதாக நான் கேள்விப்படுகிறேன். அவர்களுக்கு என் பதில் ''காந்தி யார்?'' ஏன் அந்த கிழவனார் மட்டும் எல்லாவற்றிக்கும் குரல் கொடுத்தார். அவர் எந்த கட்சி சேர்ந்தவர் அல்லதுஎந்த மாநிலத்தின் முதல்வர் எனவே குரல் கொடுக்க யாராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை மனிதனாக இருந்தால் போதும் முதல்வராகவோ அல்லது அரசுப்பொறுப்பிலோ இருக்கவேண்டும் என அவசியமில்லை அப்பொழுது நான் பேசுவதால் தீர்வுகிடைக்காது என்று நினைக்கிறார்களா? நல்லது செய்ய யார் வேண்டுமானால் போகலாம் வயது தடையல்ல எனக்கூறினார்.