Skip to main content

தொழிலாளர் நலத்துறை அலுவலர் பேச்சு வார்த்தையால் முடிவுக்கு வந்த போராட்டம்! 

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

The struggle that ended with the Labor Welfare Officer talk!

 

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பிளம்பர், எலக்ட்ரீசியன், கணினி ஆபரேட்டர் உட்பட பல்வேறு பணிகளில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

ஆனாலும் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால் தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதையடுத்து தொழிலாளர் நலத்துறை அலுவலர் தனபால் முன்னிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்