Skip to main content

தலையில் தேங்காய் உடைத்து பழங்குடியினச் சான்றிதழ் கேட்டு போராட்டம்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

struggle demanding tribal certificate by breaking coconut on head

 

திருப்பத்தூர் மாவட்ட  கல்வி அலுவலகம் முன்பு குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்க தலைவர் சிவலிங்கம் தலைமையில் குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதில் சாதி பெயர்கள் பல்வேறு வகைகளில் அழைத்தாலும் இன பட்டியலில் உள்ள குருமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடி இனச் சான்றிதழ் வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் சுற்றறிக்கையின் படியும் குருமன்ஸ் இன மக்களின் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு குருமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

 

struggle demanding tribal certificate by breaking coconut on head

 

குருமன்ஸ் பழங்குடியின கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காயை சாமி அருள் வந்தவர்களின் தலையில் உடைக்கும் குருமன்ஸ் இன மக்களுடைய பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியும் நடத்திக் காட்டி குருமன்ஸ் பழங்குடி இன சான்றிதழ் வழங்க கோரிக்கை வைத்தனர். சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தர்ணா போராட்டத்தில் குருமன்ஸ் பழங்குடி இன மக்கள் சங்க பொதுச் செயலாளர் வீரபத்திரன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் டில்லி பாபு உள்ளிட்ட பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“விளக்குமாறு விளங்கிய கையில் செங்கோல்” - வைரமுத்து

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
vairamuthu about sripathy

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. ஏழ்மை குடும்பப் பின்னணியில் வளர்ந்த ஸ்ரீபதி கல்வியின் முக்கியத்துவம் கருதி வறுமையிலும் போராடிக் கல்வி கற்று பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பு படிக்கும் போது ஸ்ரீபதிக்கு திருமணமான நிலையில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இந்தச் சமயம் ஸ்ரீபதி  கருவுற்ற நிலையில் தேர்வு தேதியும், பிரசவ தேதியும் ஒரே நாளில் வந்துள்ளது. 

ஆனால் ஸ்ரீபதிக்கு தேர்வுக்கு ஒரு நாள் முன்பே பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் பிரசவமான இரண்டாவது நாளே தன்னுடைய கணவர் உதவியுடன் சென்னைக்கு காரில் வந்து சிவில் நீதிபதி தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின பெண் சிவில் நீதிபதியாக தேர்வாகி சாதனை படைத்துள்ளார். 

இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் எக்ஸ் தளத்தில் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜி.வி பிரகாஷ், “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் அசோக் செல்வன், “தமிழகத்தின் முதல் பழங்குடியினப் பெண் நீதிபதி. மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்” என பதிவிட்டுருந்தார். 

இதனை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து, 

“இரும்பைப் பொன்செய்யும்
இருட்கணம் எரிக்கும்

சனாதன பேதம்
சமன் செய்யும்

ஆதி அவமானம் அழிக்கும்

விலங்குகட்குச் சிறகுதரும்

அடிமைப் பெண்ணை
அரசியாக்கும்

விளக்குமாறு விளங்கிய கையில்
செங்கோல் வழங்கும் 

கல்வியால் நேரும்
இவையென்று காட்டிய
பழங்குடிப் பவளமே ஸ்ரீபதி

உன் முறுக்கிய முயற்சியில்
இருக்கிற சமூகம்
பாடம் கற்கட்டும்

வளர்பிறை வாழ்த்து” என குறிப்பிட்டுள்ளார்.