Skip to main content

ஹெல்மெட் போடாமல் சென்றால் வீடு தேடி வரும் அபராத நோட்டீஸ்... தமிழகத்தில் அறிமுகமாகியுள்ள புதிய டெக்னாலஜி...

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

சாலை விதிகளை மீறுபவர்களை கண்காணிப்பதற்காகவும், விபத்துகளை குறைப்பதற்காகவும் கோவை மாநகர போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

 

smart cameras in coimbatore traffic signals

 

அந்த வகையில் தற்போது சாலைகளில் நவீன கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு படியாக கோவை நகரெங்கும் குறிப்பாக அவிநாசி சாலையில் அதிகமாக கேமரா நேற்று முதல் பொருத்தப்பட்டுள்ளது தலைகவசம் அணியாமல் சென்றால் அடுத்த நாள் தபாலில் உங்கள் முகவரிக்கு புகைப்படத்துடன் வண்டி எண் மற்றும் இடம் நேரம் முதல், அபராத தொகை முதலிய கடிதம் வரும் .இது நேற்று முதல் கோவைவாசிகள் பெரும்பாலானோரை ஹெல்மெட் அணிய வைத்திருக்கிறது.

சார்ந்த செய்திகள்