Published on 19/03/2025 | Edited on 19/03/2025

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அறங்காவலராக நர்க்கீஸ்கான் என்ற இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது இந்நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை என்ன? என்று தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது.
அதில், “அவர் (நர்க்கீஸ்கான்) இஸ்லாமியர் அல்ல. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள ரெகுநாதபுரம் கிராமம் இராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நர்க்கீஸ்கானின் தந்தை பெயர் தங்கராஜ். அவர் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. மிகச் சிக்கலான நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர் நர்க்கீஸ்கானின் பெயரை அவருக்கு வைத்துள்ளார்கள் என்று கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.