புதுக்கோட்டை நகராட்சியில் எந்தப் பணிகளும் சரிவர நடப்பதில்லை. பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறைகளை எந்தக் காலத்திலும் சுத்தம் செய்வதில்லை. அதனால் வெளியூர் பயணிகள் ரொம்பவே அவதிப்பட்டுக் கொண்டு செல்கிறார்கள்.

எதற்காக இப்படி என்றால் கட்டண கழிப்பறைகளுக்கு டெண்டர் எடுத்தவர்களின் மிரட்டலான வேண்டுகோளை ஏற்று இலவச பொது கழிவறைகளை சுத்தம் செய்வதில்லை என்று நகராட்சி பணியாளர்களே சொல்கிறார்கள். இந்த லட்சணத்தில் பொது இடங்களை சிறுநீர் கூட கழிப்பதில்லை நகராட்சியில் என்று விருது வேறு வாங்கி உள்ளார்கள்.
அதேபோல நகராட்சியில் பல இடங்களிலும் பாதாள சாக்கடை சாலைகளில் ஓடுகிறது. மாலையிடு பகுதியில் பல மாதங்களாக பாதாள சாக்கிடை சாலையில் ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. யாரும் குடியிருக்க முடியவில்லை. கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் பலமுறை தூய்மை விருது பெற்ற நகராட்சியில் மனு கொடுத்தனர். யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

அதனால இன்று திரண்ட பெண்கள் பாதாளசாக்கடை சாலையில் ஓடும் இடத்தில் மூக்கை பிடித்துக் கொண்டு சங்கு ஊதி நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதன் பிறகும் அந்த சாக்கடை சீரமைக்கப்படுமா என்றால் கேள்விக்குறி தான்.