Skip to main content

விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு சீல்; குமுறும் கோடைவாசிகள்!!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

திண்டுக்கல் மாவட்டம் கோடை இளவரசியான கொடைக்கானல் சுற்றுலா தளமாக விளங்கி வருவதால், தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு போவது வழக்கம். இப்படி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி அண்ணா நகர், மூஞ்சிக்கல், நாயுடுபுரம், லேக் ஏரியா, பில்லர்லேக் உள்பட சில பகுதிகளில் கட்டிடங்களையும், ஓட்டல்களையும் கட்டியிருக்கிறார்கள்.

 

 Sealed to buildings that have been violated by the rules in kodaikanal

 

இந்தநிலையில்தான் சில சமூக ஆர்வலர்கள் மதுரை ஐகோர்ட்டில் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி பல கட்டிடங்களை எழுப்பி உள்ளனர். இந்த கட்டிடங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டும் கொடைக்கானலில் பல பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்த 45 ஓட்டல்களுக்கும், கட்டிடங்களுக்கும் சீல் வைக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகேசன், நகர அமைப்பு அலுவலர் முருகானந்தம், பரமக்குடி, பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளில் உள்ள நகரமைப்பு அலுவலர்கள் ஆய்வாளர்கள் கொண்ட குழுவினரை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.

 

அதன் அடிப்படையில் நான்கு குழுக்களாக பிரிந்து கொடைக்கானல் நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த ஓட்டல்கள், லாட்ஜ்களுக்கு சீல் வைத்து வருகிறார்கள்.அதுபோல் நகராட்சி கமிஷ்னர் முருகேசன் தலைமையிலான அலுவலர்கள் வாரகவேளி, ரெஸ்டாரெண்ட், உட்டீஸ் ஓட்டல் உள்பட சில ஓட்டல்களுக்கு சீல் வைத்து வருகிறார்கள். இப்படி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க செல்லும் நகராட்சி அதிகாரிகளுடன் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு முதலில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன்பின் இந்த கட்டிட வளாகத்தை இழுத்து பூட்டி சீல் வைத்துவிட்டு வருகிறார்கள். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் இருபதுக்கும் மேற்பட்ட விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு அதிகாரிகள் 45 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.

 

 

இப்படி விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைத்த அறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் மாவட்ட நிர்வாகி நகராட்சி ஆணையாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் ஜனவரி 31ம் தேதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து மதுரை ஐகோர்ட் கிளையும், மேலும் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 1417 கட்டிடங்களையும், மார்ச் 11ம் தேதிக்குள் ஆய்வு செய்து அப்படி விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பை துண்டித்து கட்டிடங்களுக்கும் சீல் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

 

 

அதைத் தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கையில் அதிரடியாக களமிறங்கி வருகிறது.

 

இந்தநிலையில் கொடைக்கானலில் உள்ள லாட்ஜ் மற்றும் வர்த்தக உரிமையாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் திண்டுக்கல்லுக்கு வந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். ஆனால் கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரியான வேலுவிடம் தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.  கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கடந்த 1976-ம் ஆண்டு போடப்பட்ட மாஸ்டர் பிளான் தொடர்ந்து இருந்து வருகிறதே தவிர அதை மாற்றி அமைக்கவில்லை. ஆனால் விதிமுறைகளின்படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாஸ்டர் பிளானை மாற்றி அமைக்க வேண்டும். அந்த விதிமுறையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவரை கோர்ட் உத்தரவை நிறுத்தி வைத்து எங்களுக்கு கருணை காட்ட வேண்டும் என கூறி மனு கொடுத்து இருக்கிறார்கள். இப்படி அதிரடியாக மதுரை ஐகோர்ட் கிளை தொடர்ந்து கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க சொல்லி வருவது கொடைக்கானல் வாழும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் கிளப்பி உள்ளது!

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.