Skip to main content

சாரண-சாரணியர் அமைப்பு ஒன்றும் கோட்ஷேவால் உருவாக்கப்பட்ட அமைப்பல்ல-ஹெச்.ராஜாவை எதிர்க்கும் அஸ்லம்பாஷா

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
சாரண-சாரணியர் அமைப்பு ஒன்றும் கோட்ஷேவால் உருவாக்கப்பட்ட அமைப்பல்ல-ஹெச்.ராஜாவை எதிர்க்கும் அஸ்லம் பாஷா

சாரணசாரணியர் அமைப்பின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள பாஜகவின்தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு, காங்கிரஸ் சிறுபாண்மைத்துறை தலைவர் டாக்டர் அஸ்லம் பாஷா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாணவர்கள் கல்வி கற்பதோடு நின்று விடாமல், ஒவ்வொறுவரையும் பொது சேவையில் ஈடுபட்டு சமுதாய வளர்ச்சிக்காகபயிற்றுவிக்கும் அமைப்பு சாரண-சாரணியர் அமைப்பாகும்.நாட்டு நலனில் அக்கறையுள்ளமாணவர்களாக மாற்றுவதில் இந்த அமைப்பு பெரும் பங்காற்றி வருகிறது. மாணவசமுதாயத்தினரிடையே சகிப்புத் தன்மையையும் சேவை மனப்பாண்மையையும் உருவாக்கி நலப்பணிகளை செய்து வருகிறது. மரம் வளர்த்தல், தூய்மைப் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டபொதுப் பணிகளில் ஈடுபட்டு வரும், சாரண-சாரணியர் அமைப்பு, இரத்த தானம்,கண் தானம், உள்ளிட்டஉயிர்காக்கும் உயரிய சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இயற்கை சீற்றங்களால் ஆபத்துக்கள் நிகழும் பேரிடர் காலங்களிலும் மக்களை காப்பாற்றும்அரணாய்  விளங்குகிறது இவ்வமைப்பு. மனித சேவையாற்றிவரும் அப்பேற்பட்ட மகத்தானஇயக்கத்தில் ,மனிதர்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்திட துடிக்கும் ஹெச்.ராஜாபோன்றோர் அதன் தலைமை பொறுப்பிற்கு வரத்துடிப்பது மிகப் பெரிய ஆபத்தாகும் மாணவர்சமூகத்திற்கே பெறும் அச்சுறுத்தலாகும்.

மதநல்லிணக்கமும் அமைதியும் சகோதரத்துவமும் தழைத்தோங்கும் தமிழகத்தில்மதமாச்சர்யங்களை உருவாக்கி,கல்வி நிலையங்களையும் காவி நிலையங்களாக மாற்ற துடிக்கும்பாஜக ஆர்எஸ்எஸ் ஸின் சதிதிட்டத்திற்கு எடப்பாடி அரசு ஒரு போதும் துணை போய்விடக்கூடாது.இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை தூண்டி அதில் சிறிது வெற்றி பெற்று வரும்சங்பரிவாரங்கள், தமிழக மண்ணில் மட்டும் கால்பதிக்க முடியாததை அனைவரும் மனதில்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை மாணவி அனிதாவின் மரணத்திற்குகாரணமாய் இருந்த மத்திய பாஜக வின் அங்கத்தினராகிய ஹெச்.ராஜாவை மாணவர் சமுதாயம்கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆயுதங்களை கையிலேந்தி கலவரம் செய்யபயிற்சியளிக்கும் ஆர்எஸ்எஸ் அல்ல என்பதையும், ஹெச்.ராஜா விளங்கி கொள்ள வேண்டும். சாரண-சாரணியர் அமைப்புக்கு ஹெச்.ராஜாவை தலைவராக்க முயற்சிக்கும் செயல் கடும்கண்டனத்திற்குரியதோடு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் தமிழக அரசையும் ஆட்டுவிக்கும் ஆதிக்க சக்தியாக மத்திய மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது மேலும் மேலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.


சார்ந்த செய்திகள்