Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

SALEM DISTRICT METTUR DAM WATER LEVEL

 

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.

 

இன்று (05/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21,339 கன அடியில் இருந்து 17,790 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.95 அடியாகவும், நீர் இருப்பு 53.74 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. டெல்டா பாசனத்தேவைக்காக காவிரியில் 9,000 கன அடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 23,000 கன அடியில் இருந்து 16,000 கன அடியாக குறைந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தமிழகத்துக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்