Skip to main content

"எம்.ஜி.ஆர்., ஜெ.வுக்கு வாரிசு கிடையாது": முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

SALEM DISTRICT AMMA MINI CLINIC OPENING CM PALANISAMY SPEECH


சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே வாணியம்பாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த மினி கிளினிக்கால் கருவேப்பிலாங்காடு, மூக்குத்திப்பாளையம், ஏர்வாடி உள்ளிட்ட கிராம மக்கள் பயனடைவர்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காகவே மினி கிளினிக் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது; இரண்டு பேருக்கும் மக்கள் தான் வாரிசு. வீரபாண்டி பிரிவில் ரூபாய் 45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். கரோனா தடுப்புப் பணிக்காக மாவட்டந்தோறும் சென்று நேரடியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன். மக்களை சந்திப்பது பெரிதா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை விமர்சித்து வருகிறார்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்