இன்று தேசிய பத்திரிகை தினம். பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட நாளான நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்கு பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அண்மையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகை தின வாழ்த்துகளை தெரிவித்தார். அதில் பத்திரிகை என்பதற்கு பதிலாக பத்திரிக்கை என்று உள்ளது. பத்திரிகை என்றால் மட்டுமே ஊடகங்கள், செய்தித்தாள்கள், இதழ்கள் போன்றவற்றை குறிக்கும். பத்திரிக்கை என்றால் கல்யாண பத்திரிக்கையை குறிக்கும். துணை முதல்வரின் இந்த ட்வீட் பத்திரிகையாளர்கள் பலரை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது.
"தேசிய பத்திரிக்கை தின" வாழ்த்து வாழ்த்து செய்தி... pic.twitter.com/dqK1gphNxn
— O Panneerselvam (@OfficeOfOPS) November 16, 2018
உண்மைச் செய்திகளை உடனுக்குடன் நடுநிலையோடு வழங்கி, வலிமையான ஜனநாயகத்தினை உருவாக்கவும், சமுதாயத்தை துடிப்புடன் வைப்பதற்காகவும் இரவு, பகல், மழை, வெயில் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து பத்திரிக்கை (ம) ஊடக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
— O Panneerselvam (@OfficeOfOPS) November 16, 2018
உலக நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் முன்னோடியாகவும் திகழும் பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறையின் சிறப்பினைப் போற்றும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 16 ஆம் நாள் "தேசிய பத்திரிக்கை தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. இச்சிறப்புமிகு தினத்தில்,
— O Panneerselvam (@OfficeOfOPS) November 16, 2018