நீட் தேர்வின் போது தேர்வு நடந்த மையங்களில் மாணவ மாணவிகளக்கு நேர்ந்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆவணங்களை சரி பார்க்கிறோம். பிட் பேப்பர்கள் இருக்கிறதா என்று சோதிக்கிறோம் என்று அவர்களை படுத்திய பாடு கொஞ்சமல்ல.
கம்மல் போடக்கூடாது. முடியை விரித்துப் போட்டு வரவேண்டும். முழுக்கை சட்டை போட்டு வரக்கூடாது என்று மனரீதியாக அவர்களை டார்ச்சர் செய்தார்கள். அவர்களுக்கு அந்த கதி என்றால், 9 வயது குழந்தைகளுக்கு அதைக்காட்டிலும் கொடூரமான தண்டனை காத்திருக்கிறது. குழந்தைகள் பாவம் பரிட்சைக்கே பயப்படும் நிலையில், அவர்களை பரீட்சை ஹாலுக்குள் அனுமதிக்கவே பல்வேறு ஆவணங்களை காட்ட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, பெற்றோரின் ஆதார் கார்டு ஆகியவற்றை காட்ட வேண்டுமாம். இதைக்காட்டிலும் குழந்தைகளை கொடுமைப்படுத்தும் அரசு வேறு எதுவும் இருக்க முடியாது என்று மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.