Skip to main content

சென்னை விமானநிலையத்திற்கு ரெட் அலர்ட்;பார்வையாளர்களுக்கு தடை

Published on 03/03/2019 | Edited on 03/03/2019

 

airport

 

சென்னை விமானநிலையத்திற்குள் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளதாகவும், இதற்கான மறு அறிவிப்பு வரும் வரை பார்வையாளர்கள் விமானநிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

 

பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பானது இரண்டு மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான இடமாக சென்னை விமானநிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதன் குறியீடு ''ரெட் அலர்ட்'' ஆகும்.

 

பயணிகளின் கூட வரும் பார்வையாளர்கள், உறவினர்கள், வழியனுப்ப வருபவர்கள் அனைவருமே கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப் படுவார்கள். அதேபோல் பயணிகள் எடுத்துவரும் உடைமைகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள்  என இரண்டு முனையங்கள் இருக்கிறது. வெளி நாட்டு முனையங்களில் பயணிகளுடன் வரும் குடும்பத்தார் அல்லது அவர்களை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் உள்ளே செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்