Skip to main content

“ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தால் உச்சநீதிமன்றம் வரை செல்ல தயார்” - மிலானி தகவல்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

 'Ready to go to Supreme Court if Rabindranath appeals' - Milani information

 

தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை தொடர்ந்த மிலானி, ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தால் நான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2019ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகம் - பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஆளுங்கட்சியான திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் 76 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்பொழுதே கூட இந்த வெற்றி முறையான வெற்றி அல்ல அதிகாரத் துஷ்பிரயோகத்தால் ஓட்டு இயந்திரத்தை மாற்றி ரவீந்திரநாத் வெற்றி பெற்று இருக்கிறார் என ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட சிலரும் குரல் கொடுத்தனர்.

 

இந்நிலையில், தேனி மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான மிலானி என்பவர் எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதியரசர் சுந்தர், தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு தீர்ப்பை தற்போது நிறுத்தி வைத்து இருக்கிறார்.

 

nn

                                                                    மிலானி

இது சம்பந்தமாக ஓ.பி.ஆர். வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முன்னாள் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மிலானியிடம் கேட்டபோது, ''ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து இருந்தேன். அதாவது வேட்புமனுத் தாக்குதலின் போது முக்கிய ஆவணங்களை மறைத்தும் சில விவரங்களைத் தவறாகவும் சொல்லியிருக்கிறார். அதுபோல் தேர்தலில் மக்களுக்குப் பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கியிருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து இருக்கிறோம். அதை வைத்து தான் ரவீந்திரன் வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்து இருந்தோம். அதன் அடிப்படையில் தான் நீதியரசரும் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது எனக் கூறியிருக்கிறார். இது எந்த பிரிவில் நீதியரசர் தீர்ப்பு வழங்கினார் என்பது தீர்ப்பு நகல் வந்த பின் தான் தெரியும். அதோடு மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கொடுத்திருக்கிறார். அப்படி ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தால் நானும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யத் தயாராக இருக்கிறேன்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.