Skip to main content

குடியரசு தினத்தை கொண்டாடாத கோட்டாட்சியர் அலுவலகம்...!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து ராணிபேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டமாக உருவானது. திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்குவதற்கு முன்பாக கோட்டாட்சியர் அலுவலகம் திருப்பத்தூரில் இயங்கி வந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டமாக அறிவித்த பின்னர் கோட்டாட்சியர் அலுவலகம் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. 

 

RDO  office not celebrating Republic Day

 



வாணியம்பாடி வருவாய்கோட்டமாக அறிவித்துள்ளதால் வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் உள்ள நகரமன்ற கூட்டம் அறை தற்காலிக கோட்டாட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஆனால் வாணியம்பாடி கோடாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி ஆகியும் அலுவலகம் பூட்டு போட்டு காணப்பட்டது. குறைந்த பட்சம் நகராட்சி அலுவலகத்தியில் நடந்த குடியரசு தின விழாவில் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து இருக்கலாமே என்று சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்கருத்து தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்