Published on 03/12/2020 | Edited on 03/12/2020

இலங்கையில் மையம் கொண்டுள்ள ‘புரெவி’ புயல் இன்று மதியத்திற்கு பிறகு டெல்டாவின் தெற்கு பகுதியில் மணமேல்குடி ஆகிய பகுதிகளில் வலுவிழந்து கரையை கடக்கும் என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

நேற்று இரவு தொடங்கிய மழை இன்னும் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் இரவு வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு கூறியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது ஒரு சில இடங்களில் மரங்களும் சாய்ந்துள்ளது.