Skip to main content

ஆவின் பால் பொருட்கள் விலையேற்றம்... அரசு அறிவிப்பு!

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

MILK

 

5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலையை உயர்த்தி அரசு நிறுவனமான ஆவின் நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விலையேற்றம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. 100கிராம் தயிர் விலை 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும், 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயிலிருந்து 28 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் நெய்க்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 530 ரூபாயிலிருந்து 580 ரூபாய்க்கு விற்கப்பட இருக்கிறது. ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் விலையேற்றப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிரின் விலை 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் பிரீமியம் தயிர் ஒரு லிட்டர் 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய்க்கு விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம் உயர்த்தப்பட்ட பால் பொருட்களின் விலையை திரும்பப்பெற வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் ஆவினை வலியுறுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்