தமிழகத்தில் பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பருவமழை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பயிர் காப்பீட்டு காலத்தை நீட்டிப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உயிர்சேதம், பொருட்சேதத்தை தவிர்க்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் சென்றடைய உபகரணங்களுடன் மீட்புக்குழு தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே முதல்வர் நாளை (03.12.2019) கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடுருக்கு செல்கிறார், தொடர்மழை காரணமாக வீடுகள் இடிந்ததில் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் முதல்வர், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் வழங்குகிறார்.