தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று மதியம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் தமிழ்நாடு வந்தார். சென்னை விமான நிலையம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர், சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்துவைத்தார்.
அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்திற்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து நீலகிரிக்குச் சென்ற குடியரசுத் தலைவர், ராணுவப் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், தனது ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, சூலூரிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.