Skip to main content

வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்கவேண்டும் - கமல் கோபம்!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

gh

 

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக, 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்டப் பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் கடந்த வாரம் நிறைவுசெய்தார். தற்போது சென்னை புறநகர்ப் பகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்துவருகிறார்.

 

இதற்காக ஒவ்வொரு இடங்களுக்குச் சென்று பரப்புரை செய்து வருகிறார். ஆளும் மற்றும் தி.மு.க கட்சிகளை அவர் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இதனிடையே ட்விட்டரிலும் பரப்புரைக்கு இடையிடையே கருத்துத் தெரிவித்துவருகிறார். இந்நிலையில், வருமான வரி செலுத்தியது தொடர்பாக தன்னிடம் வருமான வரித்துறைதான் கேள்வி கேட்கவேண்டும் என்றும், தனி நபர்கள் என்னிடம் அது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்க எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் திரையிடப்பட்ட விக்ரம் ட்ரைலர்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

k

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி  ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் உலகின் உயரமான கட்டடத்தில் திரையிடப் படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது திரையிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ப்ரோமோவை ஒரு பிரம்மாண்ட மேடையில் வெளியிடப்போவதாகப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் பட புரோமோஷன் வேலைகள் வேறு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.