Published on 11/03/2023 | Edited on 11/03/2023

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் திங்கட்கிழமையும்(13.3.2023), 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமையும்(14.3.2023) பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. அதேபோல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதியும் அரசு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மாணவர்கள் தேர்வெழுதும் போது பொதுத்தேர்வுகள் நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மாணவர்கள் படிப்பதற்கு உதவியாக இருக்கும் வகையில் மின் தடை செய்யக்கூடாது என்றும், அப்படி ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.