காவலர் பணியிடங்களுக்கான தேர்வில் உயரம் குறைவாக இருப்பதாக கூறி நேர்முக தேர்வுக்கு அழைக்காததை எதிர்த்து நான்குபேர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து.
தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 170 செ.மீ. உயரம் இருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 169.5 செ.மீ. உயரம் மட்டுமே இருப்பதாக கூறி நேர்முக நேர்வுக்கு அழைக்காமல் தங்களை நிராகரித்து விட்டதாக கூறி அரசகுமார், விஜயக்குமார் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு மருத்துவமனையில் கணக்கிடப்பட்ட போது 170 செ.மீ. இருக்கும் நிலையில், தங்கள் உயரத்தை தவறான அளவிடு செய்துள்ளதால், தனி மருத்துவ குழுவை அமைத்து உயர்த்தை அளவீடு செய்து நேர்முக தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி சத்ருகனா புஜாரி வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.