Skip to main content

தமிழகத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி வேண்டும் - பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

 

 pm mod - cm-edappadi palaniswami- video conferencing meeting - covid19 issue

 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கரோனா தடுப்பு பணிகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். ஆலோசனையின் போது எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு என்95 மாஸ்க், வெண்டிலேட்டர்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  
 

சார்ந்த செய்திகள்