Skip to main content

 அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அரசு அறிவித்த ஊதியம் வழங்க மனு!

Published on 07/12/2024 | Edited on 07/12/2024
Petition to pay salary announced by govt at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு உறுப்பினர் அருட்செல்வியை  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பல்கலைக்கழக பொருளாளர் வீரமணி, இணை பொதுச் செயலாளர்கள் காந்தி,  கார்த்தி,  சுரேஷ்பாபு, துணைத் தலைவர்  ராஜா சங்க ஊழியர்கள் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் NMR ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி அந்தந்த   பணி பெயரில்  உள்ள ஊழியர்களுக்கு 2024 - 2025 வருடத்திற்காக அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க வேண்டும். அதேபோல் தொகுப்பு ஊழியர்களை நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அருட்செல்வி இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

சார்ந்த செய்திகள்