Skip to main content

மனைவியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த காவலர்.. ஆணையரிடம் புகார் கொடுத்த கணவர்..! 

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Person gave Complaint on PC Chennai police Commissioner office


நக்கீரன் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், "தன் குடும்ப வாழ்க்கையே ஒரு போலீஸ்காரரால் பாழாய் போனது" என்றார். தன் மனைவியுடன் அந்த காவலர் தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச படங்களை ஷோசியல் மீடியாவில் போடுவேன் என்றும், இதை தவிர்க வேண்டும் என்றால் பத்து லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் கேட்டு மிரட்டுகிறார் என்றார். 

 

பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்தோம், "என் பெயர் ஜெயபிரகாஷ், சென்னை மண்ணடியில் கூரியர் தொழில் செய்கிறேன். 2002ம் வருஷம் என் மனைவியை காதல் திருமணம் செய்தேன். 19 வயசுல மகன் இருக்கான். என்னோட கூரியர் ஆபீஸ் முத்தியால்பேட்டை காவல்நிலையம் எதிரே இருக்கு. கடந்த சில வருசமா என் மனைவியும் கூரியர் ஆபீசை கவனித்து வந்தார்.  இந்நிலையில் கடத்த ஜூன் 6ம் தேதியன்று என் மனைவி அளவுக்கதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை ஒருவழியாக காப்பாற்றிவிட்டேன். எந்தப் பிரச்னையும் குடும்பத்தில் இல்லாதபோது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை என் மனைவியிடம் கேட்டேன். 

 

அதற்கு என் மனைவி, "முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான கான்ஸ்டெபில் பெஞ்சமின் பிராங்க்ளின் உடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் என்னுடன் பல முறை தனிமையில் இருந்தார். என்னை ஆபாச வீடியோ எடுத்து வைச்சிக்கிட்டு மிரட்டி வீட்டில இருந்த மூனு லட்சம் ரூபாய், மூன்று சவரன் நகை, மற்றும் காஸ்லி மொபைல் போன் எல்லாத்தையும் பிடிங்கி கொண்டார். தொடர்து பணம் கேட்டு மிரட்டி வருகிறார். பணம் தர்லனா என்னோட ஆபாச வீடியோவை ஷோசீயல் மீடியாவுல போட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்” என்று என்னிடம் சொன்னார்.

 

இது சம்மந்தமா புகார் கொடுக்க முயன்ற போது, பெஞ்சமின் பிராங்க்ளின், என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் புகாரை வாங்கவில்லை. மாறாக என் மீதே வழக்கு போடுவேன் என்று மிரட்டினார்கள். இந்த நேரத்தில் என் மனைவி மீது எனக்கு சந்தேகம் தோன்றியது. எனது மனைவியின் செல்போனை பார்த்த போது போலீஸ்காரர் பெஞ்சமினிடம் அடிக்கடி போனில் பேசிவந்ததும், அதே போல வாட்ஸ் ஆப்பில் இருவரும் சேர்ந்து எடுத்த அந்தரங்க புகைப்படங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைதேன். இது தொடர்பாக என் மனைவியிடம் கேட்டதற்கு இருவருக்கும் இடையே கருந்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீஸ்காரர் பெஞ்சமின் பிராங்கிளினிடம் கேட்டதற்கு, என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். மேலும் என் மனைவியின் அந்தரங்க புகைபடங்கள், வீடியோகளை வெளியிடாமல் இருக்க பத்து லட்சம் ரூபாய் தரும்படி மிரட்டி வருகிறார். இந்தநிலையில் போலீஸ்காரர் பெஞ்சமினுடன் சேர்ந்து கொண்டு என் மனைவி, என்னை எந்த நேரமும் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதுதொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார். மேலும், பெஞ்சமினுடன் இருக்கும் சில புகைப்படத்தையும் ஆதாரமாக காட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக காவலர் பெஞ்சமின் பிரங்கிளினை தொடர்பு கொண்டோம் போனை எடுக்கவில்லை.
 

 

 

சார்ந்த செய்திகள்