Skip to main content

ஒருநாள் முதல்வர் போல் ஒருநாள் தலைமையாசிரியரான பள்ளி மாணவி!

Published on 27/01/2020 | Edited on 27/01/2020

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் சுமார் 154 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியராக வெங்கடேசன் பணியாற்றி வருகிறார். மேலும் 8 ஆசிரியர்கள், 2 அலுவலக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 
 

இப்பள்ளியில் அரையாண்டு தேர்வில் 10- ம் வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளில் யார் முதல் மதிப்பெண் பெறுகிறாரோ அவர், ஒருநாள் முதல்வர் போல், பள்ளியின் ஒருநாள் தலைமையாசிரியராக பணியாற்ற வாய்ப்பு அளிக்கபடும் என்று ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளிடம் தெரிவித்துள்ளனர்.

 One day as a headmaster school girl in thiruvannamalai district


இந்நிலையில் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நெசவு கூலி தொழிலாளி சௌந்தராஜன் சரிதா தம்பதியினரின் மகள் மதுமிதா, நெசல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 10- ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் 447 மதிப்பெண் எடுத்து முதல் மாணவியாக வந்துள்ளார். 
 

அதனை தொடர்ந்து ஜனவரி 27- ந்தேதி காலையில் பள்ளி தலைமையாசிரியையாக 10- ம் வகுப்பு மாணவி மதுமிதா பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்று கொண்ட மதுமிதாவிற்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் கௌரவித்து பாராட்டினர்.

 One day as a headmaster school girl in thiruvannamalai district


மேலும் அனைத்து வகுப்பிற்கு சென்று மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடு, மாணவர்களிடம் கேள்வி கேட்டு உரையாடல், கணினி மையத்தில் மாணவ- மாணவிகளின் கற்றலை கூர்ந்து கவனித்து மாணவ- மாணவிகளுக்கு 10- ம் வகுப்பு மாணவி மதுமிதா அறிவுரை வழங்கினார். பின்னர் பள்ளி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளியின் சுற்றிகை பதிவேட்டில் பள்ளி சம்மந்தமான பதிவுகளை ஒருநாள் தலைமையாசிரியை மதுமிதா பதிவு செய்தார். 
 

அரசு பள்ளியில் 10- ம் வகுப்பு மாணவி ஒருநாள் தலைமையாசிரியராக பொறுப்பேற்று பணியாற்றிய நிகழ்வு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்