Skip to main content

மஹா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது!

Published on 01/03/2022 | Edited on 01/03/2022

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்லி அறக்கட்டளை சார்பில் தெற்கு வீதியில் 41- வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மஹா சிவராத்திரி நாளான இன்று (01/03/2022) மாலை தொடங்கியது. மாலை 06.15- 06.30 மணி வரை மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 06.30- 06.55 மணி வரை மைசூர் அனுஷாராஜின் பரதநாட்டியம், இரவு 07.00- 07.30 மணி வரை தொடக்க விழா நிகழ்வுகள், இரவு 07.30- 08.05 வரை அருட்பெரும்ஜோதி பரதநாட்டியம், இரவு 08.10- 08.40 மணி வரை ஹைதராபாத் ஹிமன்சே கத்ரகட்டாவின் கூச்சுப்பிடியும், இரவு 08.45- 09.10 மணிக்கு இத்தாலி லுக்ரேசியா மனிஸ்காட்டின் பரதநாட்டியம், 09.15- 09.50 மணி வரை புதுவை ஸ்ரீஉதயம் நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டியம், 09.55-10.25 மணி வரை பெங்களூரு சிருஷ்டிகலா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், 10.30- 11.05 மணி வரை பெங்களூரு நிருத்யா கலைக்கூட மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. 

 

இந்த நாட்டியாஞ்சலி விழா வரும் மார்ச் 5- ஆம் தேதி வரை நடக்கிறது. மார்ச் 4- ஆம் தேதி அன்று இரவு 07.45- 08.45 மணி வரை நிருத்திய சங்கமம் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஒரே மேடையில் பரதம், மோகினி ஆட்டம், கூச்சுப்பிடி, கதக், ஒடிசி ஆகியவை நடக்கிறது. நாட்டியாஞ்சலி விழாவிற்கான ஏற்படுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் சம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்