
என்.எல்.சி இந்தியா லிமிடெட் நெய்வேலி உள்ளூர் மையத்தில், இந்திய பொறியாளர்கள் கழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கடலூரில் உள்ள சி.கே. பொறியியல் கல்லூரிசார்பில் கட்டுமான தொழிலில் கட்டுமான இடிப்பு மற்றும் தொழிற்சாலை கழிவுகளின் பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், என்.எல்.சி இந்தியா நிறுவனம் மின்துறை இயக்குநரும், இந்திய பொறியாளர்கள் கழகத்தின் நெய்வேலி மையத்தின் தலைவருமான பொறியாளர் எம். வெங்கடாசலம் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், ‘பூமி என்பது நாம் மரபு உரிமையாகப்பெற்ற சொத்து அல்ல. மாறாக நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் செலுத்த வேண்டிய கடன். ஆகவே அதைப்பாதுகாப்பாக அவர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.மனிதர்கள், பூமியில் உள்ள மொத்த உயிரினங்களின் வெறும் 0.01% ஆகமட்டுமே உள்ளனர். ஆனால் நாம் பூமியிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றோம். எதையும் கழிவாக கருதமுடியாது, ஏனெனில் அனைத்திற்கும் ஒரு சிலமதிப்புகள் உள்ளன. மேலும் சரியான தொழில்நுட்பம் மூலம் அவற்றைப்பயனுள்ளதாக மாற்ற முடியும்’ என்று கூறினார்.
இதில் பொறியாளர் இரணியன் வரவேற்புரையாற்றினார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் சிவில பொறியியல் துறை பேராசிரியர் எஸ். நாகன், கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ். திருஞானசம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள், பொறியாளர் எம். அன்பழகன் நன்றி கூறினார்.