Skip to main content

உண்மையை புதைத்துவிட்டு என்னை பலிகடா ஆக்கினார்கள்... நக்கீரனில் நிர்மலா பற்றிய செய்தி அனைத்தும் 100க்கு100 உண்மை... அடித்து சொல்லும் முருகன்

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 


நிர்மலாதேவி வழக்கில் கைதாகி 10 மாத சிறைக்கு பிறகு இன்று (20ம் தேதி) மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த முருகன், கருப்பச்சாமியை அவர்களது மனைவி குழந்தைகளோடு வரவேற்க காத்திருந்தனர்.

 

வெளியே வந்த முருகன் நம்மிடம், “சிறை வாழ்க்கை மிக கொடிமையானது. அதாவது எந்தவித தவறும் செய்யாமல் என்னை இந்த உயர் அதிகாரிகளும், அரசியல் தலைகள் கொண்ட அதிகாரவர்க்கமும் இந்த விசயத்தில் இருந்து தப்பிக்க என்னை பலிகடா ஆக்கி சிறையில் தள்ளியது கொடுமையிலும் கொடுமை. சில நாட்கள் சிறையில் தூக்கமே வராமல் அழுது கொண்டே இருப்பேன். செஞ்சவனெல்லாம் ஹாய்யா வெளியில் இருக்கான், நம்மள இப்படி சதி பண்ணி உள்ளே தள்ளிட்டாங்களே என்று என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அந்த நாட்களில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை.

 

murugan




என் குடும்பம் நிற்கதியில் நிற்கிறது. இன்னமும் எனக்கு பயமாகதான் இருக்கிறது. சிறையிலேயே மிரட்டினார்கள். இப்போது வெளியில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறேன். முகிலனை போலிஸ் கடத்தியது போல என்னையும் கடத்தமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். நிர்மலாதேவி வாயை திறந்தால் தமிழகமே ஆட்டம் காணும். எனக்கு தெரிந்து நக்கீரனில் இதுவரை வெளிவந்த அனைத்து செய்தியுமே உண்மை.  நான் சிறையில் இருக்கும் போது என்னை பார்க்க வரும்போது என் மனைவியும் உறவினர்களும் பத்திரிகைகள் கொண்டு வந்து கொடுப்பார்கள். படித்துவிட்டு திகைத்துவிடுவேன். எப்படி இவர்களால் நடந்தவைகளை அப்படியே எழுதியிருக்கிறார்கள் என்று ஆச்சரியபடுவேன்.


கொஞ்ச நாள் பொறுங்கள் இதன் பின்னனியில் இருப்பது யார்? யார்?, நிர்மலாவின் தொடர்புகள் என்ன? என்று அனைத்தையும் வெளியில் சொல்லுவேன். தற்போது வழக்கு நடப்பதால் சொல்லமுடியாமல் தவிக்கிறேன். கட்டாயம் உண்மைகள் வெளிவரும். ஆட்சி மாறும்போது காட்சிகளும் மாறும்” என்றவர் தன் குடும்த்தோடு போட்டோ எடுத்து கொள்ள நாம் கிளம்பினோம்...
 


 

சார்ந்த செய்திகள்