Skip to main content

திருமணமான புதுப்பெண் எரித்துக் கொலை... ஊரே திரண்டு வந்து புகார்!

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

 The newly married woman was burnt... the town gathered and complained to the Kotatchiyar!

 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கரைமேடு கிராமத்தில் வசிக்கும் மோகனசுந்தரம்-உஷாராணி ஆகியோரின் மூத்த மகள் தர்ஷிகா( 26) இவரை சீர்காழி வட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாயகிருஷ்ணன்-ஜெகதாம்பாள் தம்பதியினர் மகன் கார்த்தி என்கிற பாலமுருகனுக்கு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் சீர்காழியில் உள்ள திருமண மண்டபத்தில் ரூ 15 லட்சத்தில் சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் திருமணமான 2 மாதத்தில் கணவன் ஒப்பந்தப்பணி எடுத்து வேலை செய்ய ரூ 4 லட்சம் வரதட்சணையாக வாங்கி வரச்சொல்லி மனைவியிடம்  அடிக்கடி சண்டை போட்டதால் மன உளைச்சல் தாங்காத  தர்ஷிகா தாய் வீட்டில் வசித்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

 

இதனிடையே ஊர் முக்கியஸ்தர்கள் இரு வீட்டாரிடம் சமாதானம் செய்துவைத்து கடந்த ஜூன் 5-ஆம் தேதி கணவர் வீட்டில் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி தர்ஷிகா வெந்நீர் ஊற்றிக் கொண்டதாக தாய் வீட்டிற்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சென்று பார்த்தபோது அவரது கழுத்து பகுதியிலிருந்து கீழ் வரை தீயிட்டு எரிந்தது தெரிய வந்தது.  

 

இதனையடுத்து அவரை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தர்ஷிகா ஆகஸ்ட் 23-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சிதம்பரம் மருத்துவமனையில் இறந்ததால் சம்பந்தப்பட்ட மகளின் தந்தை மோகனசுந்தரம், மகளின் கணவர் பாலமுருகன் மற்றும் அவரது அம்மா, அப்பா உள்ளிட்ட உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டதால் சிகிச்சை பலனின்றி மகள் இறந்துவிட்டதாக சிதம்பரம் கோட்டாட்சியர் ரவியை உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்களுடன் சந்தித்து புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட அவர் இறந்து போன தர்ஷிகாவின் உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

 

உயிரிழப்புக்கு முன் தர்ஷிகா தான் கொடுமைப்படுத்தப்படுவதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பேசியது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்