Published on 12/09/2020 | Edited on 12/09/2020

மதுரை தல்லாகுளத்தில் ஜோதி துர்கா என்ற மாணவி கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் எடுத்த நிலையில், நாளை நடைபெறும் நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முன்பாகவே அரியலூரில் நீட்டுக்கு தயாராகி வந்த விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் தர்மபுரியில் மேலும் ஒரு மாணவர் நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நீட் தேர்வு எழுத இருந்த தர்மபுரியைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா என்பவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.