Skip to main content

அதிக ஊழல்கள் நடைபெறுகின்றன; மத்திய அரசிடம் முறையிடுவோம்! - அண்ணாதுரை எம்.பி. பேட்டி!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

More corruption in the projects of the departments. - MP warned at the monitoring committee meeting.

 

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம், திட்டச் செயல்பாடுகள் குறித்தும் உரிய செலவினங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட அளவிலான குழு கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் செயல்பாடு மற்றும் பணி முன்னேற்றம் குறித்து குழு தலைவர் எம்.பி அண்ணாதுரை தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஒன்றிய குழு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 

இந்த கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உறுப்பினரின் மாதிரி கிராமத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் போன்ற பல திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

 

ஆய்வின்போது, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெறும் பணிகளில் பிரதமர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம், தாட்கோ, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் போன்றவற்றில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக மக்கள் பிரதிநிதிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர். அந்த துறைகள் குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறினர். இந்த துறைகளில் முறைகேடுகள் அதிகமாக நடைபெறுகின்றன என ஆய்வுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

 

இந்த கூட்டத்தில், ரயில்வே, திட்டச் செயலாக்கம் உட்பட சில துறைகளில் இருந்து அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. கூட்டம் நிறைவுற்றபின் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குழு தலைவர் அண்ணாதுரை எம்.பி, "ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தாட்கோ, வேளாண்மை பொறியில் துறை போன்றவற்றில் அதிகளவு ஊழல்கள், முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து எங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளோம். கடந்த முறை தவறுகளைச் சுட்டிக்காட்டியும் அதனை அவர்கள் திருத்திக்கொள்ளவில்லை. அடுத்த கூட்டத்துக்குள் இந்தப் புகார்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாங்கள் இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிடுவோம்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

 ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று தொடக்கம்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
New program be aunched today at Chief minister mk stalin instruction

மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் அறிவித்தார். 

'உங்களைத் தேடி - உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. 

அதன்படி, முதலமைச்சர் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’திட்டம் இன்று (31-01-24) அமலுக்கு வர உள்ளது. இன்று தொடங்கும் இந்த திட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அங்கு சென்று 24 மணி நேரம் தங்கி மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண்பர். 

மேலும், இந்த திட்டத்தின்படி, ஆட்சியர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை அந்த கிராமத்தில் தங்கி இருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் ஆட்சியர்கள், மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளனர்.  மேலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அதிகாரப் போட்டி; பேரூராட்சி கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A heated argument between the district president DMK district secretary!

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற பிரச்சனையில் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பேரூராட்சி  தலைவருக்கும் திமுக பேரூர் செயலாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி சாதாரண கூட்டம் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது குறுக்கிட்ட கவுன்சிலரும் திமுக பேரூர் செயலாளருமான விஜி என்ற விஜயகுமார், பேரூராட்சி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி வருகிறது. வரும் நிதிகளை திட்டப் பணிகளாகப் பிரிப்பது தொடர்பாக யாரை கேட்டு முடிவு எடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் செல்வராஜ், 'நீ வேண்டுமானால் தலைவராக இருந்து கொள். நான் எழுதித் தருகிறேன்' என்று ஆவேசமாக பேச, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் இருவரும் ஒருமையில் பேசிக்கொள்ள, பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. பின்னர் இருவரும் சமாதானம் அடைந்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பேரூராட்சி பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற போட்டி தற்போது பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வெடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.