Skip to main content

காலக்கெடு முடிய 6 நாட்களே உள்ளது: முடியவில்லை என்று சொல்லுங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம்: ஸ்டாலின் பேச்சு

Published on 21/03/2018 | Edited on 21/03/2018
mkstalin 91


 

“உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிய 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இந்த அரசால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் நாங்கள் செய்து காட்டுகிறோம்” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 

சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது காவிரி விவகாரம் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், 
 

அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் தான் கூட்டினார். அந்தக் கூட்டத்தில், பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது காலதாமதமான காரணத்தினால் தான், சட்டமன்றத்தை கூட்டி, இங்கு முதலமைச்சர் அவர்கள் அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து, இங்கு இருக்கின்ற எல்லா கட்சிகளும் அதனை வழிமொழிந்து, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை கடிதத்துடன் முதலமைச்சர் அவர்கள் பிரதமருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் நாங்கள் செய்திகளை பார்த்தோம். 
 

நான் இரு நாட்களுக்கு முன்பாக, இந்தப் பிரச்னையை எழுப்பிய நேரத்தில், துணை முதலமைச்சர் அதற்கு பதிலளித்தபோது, இன்னும் 9 நாட்கள் இருக்கிறது, 29 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம், நிச்சயமாக முடியும், என்ற நிலையில் ஒரு கருத்தை சொன்னார். நான் இப்போதும் கேட்கிறேன், இன்னும் 6 நாட்கள் தான் இருக்கிறது, இந்த 6 நாட்களுக்குள் பிரதமர் நம்மை சந்திக்க முடிவு செய்து, ஏதேனும் தகவல் வந்திருக்கிறதா? அல்லது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உறுதிமொழி, மத்திய அரசின் மூலமாக வழங்கப்பட்டு இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 
 

நம்முடைய மீன்வளத்துறை அமைச்சர் ஒரு அருமையான கருத்தை சொல்லியிருக்கிறார். நான் பதில் சொல்வதற்கு அது ஏதுவாக அமையும் என்று நம்புகிறேன். “எங்களால், இந்த ஆட்சியால் எதுவும் செய்ய முடியவில்லை”, என்று நீங்கள் சொல்லுங்கள், நாங்கள் செய்து காட்டுகிறோம். இவ்வாறு உரையாற்றினார்.
 

சார்ந்த செய்திகள்