Skip to main content

“ஒன்றிய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது..” - அமைச்சர் மூர்த்தி 

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Minister Moorthi conversation with traders


திருச்சியில் இன்று வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், திருச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.

 

வணிகர்கள் உடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “தமிழக அரசின்  வருவாயை அதிகரிக்கும் வகையில் பத்திரப்பதிவு துறையில் தவறிழைக்கும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜிஎஸ்டி குறைபாடுகளை கலைந்து ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப்பதிவை பொறுத்தவரை முறையாக நிலங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பத்திரப் பதிவு முறையை மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் பத்திரப் பதிவுகளில் நடைபெற்ற அனைத்து குற்ற குறைகள் கண்டறியப்பட்டு தவறிழைத்தோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சிறு வணிகர்கள் சந்திக்கும் பாதிப்பை சரி செய்வதற்கு அதற்கான கட்டுப்பாட்டு அறையும் ஆணையர்களின் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.


 
ஒன்றிய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை குறைப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு தான் மேற்கொள்ள முடியும். மாநில அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போல குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும். வணிகர் நல வாரியத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக இணையலாம். 40 லட்சத்திற்கும் குறைவான வணிகம் செய்பவர்களும் இதில் உறுப்பினராக முடியும்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” - நயினார் பாலாஜி நில முறைகேடு குறித்து அமைச்சர் உறுதி

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

15 days action taken nainaar balaji land issue

 

வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தனி துணை ஆட்சியர்கள் ஆகியோரின் மே மாதத்திற்கான பணி சீராய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி 100 கோடி மதிப்பிலான இடத்தை முறைகேடாக தனது பெயரில் பதிவு செய்த விவகாரம் குறித்து அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 

இது குறித்து அவர் பதிலளிக்கையில், “இந்த புகார் தொடர்பான நிலம் இரண்டு இடங்களில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் பிறகு பதிவுத்துறை மண்டல துணை தலைவர்கள் மூலம் இன்னும் 15 நாட்களுக்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

 

 

Next Story

''ஒன்றரை கோடிக்கு சாப்பாடு போட்டேன்... எடப்பாடி என்ன கணக்குப்புள்ள வேலை பார்த்தாரா?''-அமைச்சர் மூர்த்தி பேட்டி 

Published on 30/09/2022 | Edited on 30/09/2022

 

 "I put food for one and a half crores... Did Edappadi do any accounting work?" - Minister Moorthy interview

 

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவரது இல்ல திருமண விழாவை 30 கோடி ரூபாயில் நடத்தியதாக நேற்று மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தியிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, ''எதில் அரசியல் பண்ணவேண்டும் என ஒரு நாகரீகம் கருதி அரசியல் பண்ண வேண்டும். இதுதான் சமூக நீதியா? இதுதான் திராவிட மாடலா? என்று கேட்கிறார். ஆமாம் இதுதான் திராவிட மாடல். கல்யாணத்தில் ஏழை மக்கள், சாதி சமுதாயத்திற்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து சாப்பாடு போட்டோம்.

 

சாப்பாடு போட்டால் என்ன? ஒரு இலைக்கு எவ்ளோ வரும். அதிகபட்சமா 300 ரூபாய் வருமா? 50 ஆயிரம் பேர் சாப்பிட்டுருப்பாங்களா ஒன்றரைக்கோடி வருமா. நான் இதை அரசியலாக்க வேண்டாம் என்று பார்த்திருந்தேன். 30 கோடி என்று சொல்கிறாரே இவர்தான் கணக்குப்புள்ள வேலை பார்த்தாரா? அப்போ பொதுச்செயலாளர் ஆவதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து வந்திருக்கிறார்'' என்றார்.