தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை அண்ணாநகர், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம், மாம்பலம், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அசோக் நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் கடந்த 1 மணி நேரமாகக் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (30.10.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது பகல் 1 மணி 3 மணி பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே சமயம் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (30.10.2024)) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விருதுநகர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (31.10.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரை, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுநாள் (01.11.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 2ஆம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.