நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது . இதனால் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து மாநிலங்களிலும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளார் .இந்நிலையில் நேற்று வரை (07/04/2019) தமிழகத்தில் சுமார் 160.39 கோடி ரூபாய் பணமும் , சுமார் 228.85 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் , வெள்ளி உள்ளிட்ட பொருட்களுடன் மொத்தம் சுமார் 398.11 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர் .
மேலும் குஜராத் மாநிலத்தில் மட்டும் மொத்தம் சுமார் 513.2 கோடி மதிப்பிலான பணம் ,தங்கம் ,உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படையினர் .இது இந்தியாவிலேயே குஜராத்தில் தான் அதிக மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . மக்களவைக்கான முதற்கட்ட தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சோதனையை தீவிரப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது .
பி.சந்தோஷ் , சேலம் .