Skip to main content

லாரிகளை நிறுத்தி சுங்கச்சாவடிகளை முற்றுகையிடுவோம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு..!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018


இந்தியா முழுக்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் விவசாயம், ஜவுளி என அனைத்து தொழில்களும் முடங்கிப் போயுள்ளது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் பேசிய தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்ல ராஜாமணி,

"லாரி உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமானது.  மத்திய அரசு சங்க நிர்வாகிகளை அழைத்து பேசியிருக்க வேண்டும். ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது. இனியும் லாரி உரிமையாளர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு கண்டு ஸ்டிரைக்கை வாபஸ் பெற வைக்கவில்லையென்றால் இந்தியா முழுக்க உள்ள சுங்கச்சாவடிகளான டோல்கேட்டுகளை அகற்ற கோரி அந்த சுங்கச்சாவடிகளை சுற்றி வளைத்து லாரிகளை நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம். மேலும் நீதிமன்றத்திற்கு செல்லவும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.

சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு அதை அடைப்போம் என லாரி உரிமையாளர்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்