Skip to main content

மது விற்பனைக்கு உதவியாக இருந்த தாசில்தார், போலீஸ் எஸ்.ஐ. உட்பட 8 பேர் கைது!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020


கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் தவித்து வருகின்றனர். இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.
 

 

 

Liquor

இதனிடையே கள்ளத்தனமாக மது விற்பனை தொடர்பான புகார்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்குச் சென்ற நிலையில், அனைத்து மதுபானக் கடைகளையும் சீல் வைத்து, அதில் உள்ள மதுபானங்களின் இருப்பு குறித்து கணக்கெடுக்குமாறு கிரண்பேடி அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து கலால்துறையினர் மதுபானக் கடைகளை சீல் வைத்து, மதுபானம் இருப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

 

pppp



மேலும் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 30 மதுபானக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, சுமார் 10 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க மதுபானங்களை கடத்தி விற்பனை செய்வதற்கு போலீசார் மற்றும் கலால்துறை அதிகாரிகளே உடந்தையாக இருப்பதாக கிரண்பேடிக்கு புகார் சென்றது. 
 

http://onelink.to/nknapp

 

இதனைத் தொடர்ந்து கிரண்பேடி அதிரடியாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதாவது, புதுச்சேரி மாநிலத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடந்தால், அந்த விற்பனை நடந்த காவல்நிலைய அதிகாரி காணொலி காட்சியில் விசாரிக்கப்படுவார். இந்த விசாரணையில் துணை நிலை ஆளுநர், டி.ஜி.பி, ஐ.ஜி, முதுநிலை எஸ்பி ஆகியோர் ஈடுபடுவோம்.
 

கள்ளச்சந்தையில் மதுவிற்பனை தொடர்பாகக் கலால்துறையும், காவல்துறையும் மாறி மாறி புகார் கூறிகொள்கின்றனர். கள்ளச்சந்தையில் மது விற்றால் கண்டறிவதுதான் காவல்துறையினரின் பணி, கள்ளச்சந்தையில் மது விற்பனைக்கு காரணம் காவல்துறையின் கவனக்குறைவுதான். காவல்துறையினரிடம் விசாரிப்பது போல், கலால்துறையினரையும் தலைமைச்செயலர், துறை செயலருடன் விசாரிக்க உள்ளேன் என உத்தரவிட்டிருந்தார்.

 

கிரண்பேடி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே மதுபானம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், மது திருடியதற்காகவும் தாசில்தார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வில்லியனூர் சரக தாசில்தார் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் மடுகரை கிராமத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு ஆய்வுக்குச் சென்றபோது, அங்கிருந்த மதுபாட்டில்களை தாசில்தார் கார்த்திகேயன் அவரது தேவைக்கு எடுத்து கொண்டதாகவும், மதுபானம் கடத்தலுக்கு உதவி செய்ததாகவும், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்துவந்த ஆனந்த்பாபு என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

 

இதனையடுத்து சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில், தாசில்தார் கார்த்திகேயன் மதுபானங்களை திருடியது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அரசு ஊரடங்கு உத்தரவை மீறல், தொற்றுநோயை பரப்புதல், கலால்துறை சட்டம் உள்பட 4 பிரிவின் கீழ் தாசில்தார் கார்த்திகேயன் மீது மடுகரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டிலிருந்த மதுபானங்களைப் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், எழுத்தர் சேதுராமன், ஓட்டுநர் கருணமூர்த்தி, எழுத்தர் செந்தில் மற்றும் ஓட்டுநர் சுந்தர், நெட்டப்பாக்கம் பகுதி உதவி காவல் ஆய்வாளர் அர்ஜுனன், காவலர் ஜெயராம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  
 

 

 

 

அத்துடன் இதுதொடர்பாக கவனம் செலுத்தத் தவறிய பாகூர் பகுதி காவல் ஆய்வாளர் அனில்குமார், வில்லியனூர் பகுதி உதவி காவல் ஆய்வாளர் நந்தகுமார், இருவரும்  ஆயுதப்படைக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

 

இதனிடையே புதுச்சேரி சட்டம் ஒழுங்கு பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்த ராகுல் அல்வால்க்கு பதிலாக காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால் புதுச்சேரி சட்டம் ஒழுங்கு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பினை காவல் கண்காணிப்பாளர் ரட்சணாசிங் கவனிப்பார். மதுபானக் கடத்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 12 வழக்குகளை ராகுல் அலுவால் விரிவாக விசாரிப்பார் எனக் காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்