Skip to main content

அமைச்சர் ஊரில் பெண் அதிகாரி களவாடிய தங்கநகை

Published on 11/07/2018 | Edited on 11/07/2018
gold

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில்  கயிலாயநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் செயல் அதிகாரியாக இருப்பவர் சசிகலா.

 

கடந்த 2017 பிப்ரவரி 16ந்தேதி கோயில் உண்டியல் சசிகலா, ஆய்வாளர் நடராஜன், பக்தர்கள் சங்க தலைவர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமையில் உண்டியல் திறந்து எண்ணியுள்ளனர். உண்டியலில் அட்டிகை, கம்மல், மோதிரம், பிரேஸ்லெட் என 8 பவுன் தங்கநகை மற்றும் பணம் இருந்துள்ளது.

 

அதிகாரிகள் பணத்தை மட்டும் கணக்கேட்டில் கணக்கு எழுதிவிட்டு தங்கநகையை எழுதக்காணோம். இதுப்பற்றி பக்தர்கள் சபை கேள்வி கேட்டதும், அடுத்த முறை எழுதிவிடுகிறேன் என்றுள்ளார். அதன்பின் 3 முறை கோயில் உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவேட்டில் தங்கநகைகளை வரவு வைக்கவில்லை.

 

இதனால் அதிர்ச்சியானவர்கள் மண்டல அதிகாரிக்கு புகார் எழுதியுள்ளனர். விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலன் இதுக்குறித்து விசாரித்தபோது, எழுதிவிடுகிறேன் என்றவர் எழுதக்காணோம். கடந்த 6ந்தேதி வேறு ஒரு கோயில் ஆய்வுக்காக வந்த இணை ஆணையரிடம் மீண்டும் புகார் கூறியுள்ளனர்.

 


எழுதறது என் வேலையில்லை, கணக்காளர் வேலையென உயர்அதிகாரியிடம் நக்கலாக பதில் சொல்லியுள்ளார். இதில் கோபமான அவர் 9ந்தேதி விசாரணைக்கு விழுப்புரம் வரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதையும் அந்த பெண் அதிகாரி மதிக்காததால் உயர் அதிகாரிகளே நொந்துப்போய்வுள்ளனர்.

சார்ந்த செய்திகள்