Skip to main content

தொகுதி அறிவோம்...இடைத்தேர்தல் குடியாத்தம் (தனி)

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

வேலூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய தொகுதி குடியாத்தம் ( தனி ) தொகுதி. தற்போது இது தனித்தொகுதியாக இருந்தாலும் 2001 க்கு முன்பு வரை இது பொது தொகுதியாக இருந்தது. அதோடு, 1951 முதல் 1961 வரை இந்த தொகுதி இரட்டை பிரதிநிதிகள் கொண்ட தொகுதியாக இருந்தது.

 

 

1951ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரத்தினசாமி, அருணாச்சல முதலியார் எம்.எல்.ஏக்களாக இருந்தனர். 1954ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜ் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 1957ல் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோதண்டராமன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணவாளன் வெற்றி பெற்றனர்.

 

election

 

1962ல் ஒரு பிரதிநிதிகள் கொண்ட தொகுதியாக மாற்றம்மடைந்த பின் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணவாளன் வெற்றி பெற்றார். 1967ல் மார்க்சிஸ்ட் கோதண்டராமன், 1971ல் திமுக துரைசாமி, 1977ல் சிபிஎம் கோதண்டராமன், 1980ல் சிபிஎம் சுந்தரம், 1984ல் காங்கிரஸ் கோவிந்தசசாமி, 1989ல் கம்யூனிஸ்ட் சுந்தரம், 1991ல் காங்கிரஸ் தண்டராயுதபாணி, 1996ல் திமுக தனபால், 2001ல் அதிமுக சூர்யகலா, 2006 ல் சிபிஎம் லதா, 2011ல் சிபிஐ லிங்கமுத்து, 2016ல் அதிமுக ஜெயந்திபத்மநாபன் வெற்றி பெற்றனர். இடதுசாரிகள் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளோடு கூட்டணிவைத்தே இந்த வெற்றிகளை பெற்றன.

 

 

 

இந்த தொகுதியில் தலித், முதலியார்கள், கிருஸ்த்துவர்கள், வன்னியர்கள், இஸ்லாமியர்கள், நாயுடு சமுகத்தவர் உள்ளனர். தொழிலாளர்கள் நிரம்பிய தொகுதியிது. தீப்பெட்டி தொழிற்சாலை, தறி நெசவாளர்கள் அதிகம்முள்ள தொகுதியது. அதற்கடுத்து விவசாயம் பிரதானம். இந்த தொகுதியின் பெரும்பான்மை பகுதிகள் ஆந்திரா மாநில எல்லையை ஒட்டியபடி உள்ளன என்பதால் கால்நடை வளர்ப்பில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

 

 

 

இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் தமிழகத்துக்கு ஒரு முதல்வரை தந்தது. அந்த முதல்வர் காங்கிரஸ் காமராஜர்.

 

 

 

தமிழக முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி, குலக்கல்வி திட்டத்தால் மக்களிடையே பெரும் எதிர்ப்பை சம்பாதித்தார். இதனால் நேரு அவரை பதவி விலகச்சொன்னார். அந்தயிடத்தில் தனது ஆதரவாளரான தனது அமைச்சரவையில் இருந்த சி.சுப்பிரமணியத்தை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்தார். இதனை அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்த காமராஜர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.எல்.ஏவாக இல்லாத காமராஜ்ஜை முதல்வராக முன்மொழிந்து வெற்றி பெற வைத்தனர். முதல்வர் பதவியை 1953ல் ஏற்றுக்கொண்டவர் பின்னர் எம்.எல்.ஏவாக வேண்டும்மென இரட்டை பிரதிநிதிகள் கொண்ட தொகுதியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருந்த அருணாச்சலம் முதலியாரை ராஜினாமா செய்ய வைத்து 1954ல் வேட்பாளராக நின்றார் காமராஜ். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி கோதண்டராமன் நின்றார். காமராஜருக்கு திமுக ஆதரவு வழங்கியது. கடும் போட்டி நிலவிய அந்த தேர்தலில் காமராஜர் வெற்றி பெற காலணா தரப்பட்டது என்கிறார்கள் அவருக்காக தேர்தல் வேலை பார்த்தவர்கள். காமராஜ் பெரும் வெற்றி பெற்றார்.

 

 

 

2016ல் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஜெயந்திபத்மநாபன், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வருகிறது. தற்போது அமமுக வேட்பாளராக ஜெயந்திபத்மநாபன், அதிமுக மூர்த்தி, திமுக காத்தவராயன் களத்தில் உள்ளனர்.

 

 

 

தற்போது தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதி வெற்றி ஆட்சியை மாற்றும்மா ? அல்லது தொடர வைக்குமா? என்பது தெரிந்துவிடும்.

 

 

சார்ந்த செய்திகள்