மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் ஒரே மேடையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யும், தி.மு.க.வின். இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் அமர்ந்திருந்தனர். அப்போது ராகுல் காந்தியும், உதயநிதி ஸ்டாலினும் சந்தித்துப் பேசினர். ஜல்லிக்கட்டு குறித்தும், அதன் விதிமுறைகள் குறித்தும் ராகுலுக்கு உதயநிதி ஸ்டாலின் எடுத்துக் கூறினார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மேடையில் அமர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிப் பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு ராகுல் காந்தி சார்பில் தலா ஒரு இரு சக்கர வாகனம் வழங்கப்படவுள்ளது.
இதனிடையே, ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'Go Back Rahul' என முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.